சனிபகவான் லக்னத்தில், குருவின் மீன ராசியில் இருந்தால் ஜாதகர் அழகான தோற்றத்துடன் இருப்பார். ஆனால் உடல்நலத்தில் சிறிய குறையிருக்கும். வெளித் தொடர்புகளில் பணம் வரும். மனைவியால் அல்லது கணவரால் சில பிரச்சினைகள் ஏற்படும். வர்த்தகத்தில் லாபம்- நஷ்டம் இரண்டுமே இருக்கும். தந்தையுடன் கருத்து வேறுபாடிருக்கும். அரசாங்க விஷயத்தில் தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி, பொறாமை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.
2-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில் சனி நீசமடைகிறது. அதன்காரணமாக பணம் சேமிப்பதில் பிரச்சினை இருக்கும். சில நேரங்களில் நஷ்டமும் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவாக இருக்கும். வெளித் தொடர்புகளில் பண இழப்பு ஏற்படும். அன்னையின் உடல்நலத்தில் சில பிரச்சினைகள் இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு.
3-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் சனி இருந்தால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தைரியம் அதிகமாக இருக்கும். ஜாதகர் துணிச்சலாக எதையும் செய்வார். வாரிசுகளால் பிரச்சினை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.
படிப்பு விஷயத்தில் தடைகள் உண்டாகும். செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் பெயர், புகழ், லாபம் கிடைக்கும்.
4-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் சனி இருந்தால் சில நேரங்களில் லாபமும், சில நேரங்களில் நஷ்டமும் உண்டாகும். அன்னை யின் உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். ஜாதகர் பூமி, மனை வாங்குவார். இல் வாழ்க்கை சந்தோஷத்தில் குறை யிருக்கும். பகைவர்களால் பிரச் சினை ஏற்படும். ஜாதகர் சுமாரான தோற்றத்துடன் இருப்பார். வெளித் தொடர்புகளில் பெயர், புகழ் கிடைக்கும்.
5-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் சனி இருந்தால் வாரிசுகளால் சில நேரங் களில் சந்தோஷம் கிடைக்கும். சில நேரங்களில் கவலை ஏற்படும். படிப்பு விஷயத்தில் தடைகளைத் தாண்டி வெற்றி கிடைக்கும். வெளித் தொடர்புகளில் பணவரவு இருக்கும்.
ஜாதகர் தன் சுய அறிவால் செலவுகளைக் கட்டுப்படுத்து வார். மனைவியின் உடல்நலத்தில் சில நேரங்களில் பிரச்சினை உண்டாகும். ஜாதகர் பணத்தை சேமிப்பார்.
6-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் சனி இருந்தால் எதிரிகள் அதிகமாக இருப்பார்கள். சண்டை, சச்சரவு அதிகமாக இருக்கும். அதிக செலவுகள் உண்டாகும். நோய்கள் இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் உண்டு. உடன்பிறந்தோருனான உறவில் குறையிருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். அதை வைத்து அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பார்.
7-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் சனி இருந்தால் மனைவியின் உடல்நலத்தில் சில குறைகள் இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
வெளித் தொடர்பில் லாபம் இருக்கும். வியாபாரத்தில் ஏற்றமும் இருக்கும். இறக்கமும் இருக்கும். உடல்நலம் அவ்வப்போது பாதிக்கப்படும். தாயாருடன் சுமாரான உறவு இருக்கும். வீடு, மனை வாங்குவதில் சில தடைகள் உண்டாகும்.
8-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் சனி உச்சமடைகிறது. பூர்வீக சொத்து கிடைக்கும். வெளித் தொடர்புகளில் ஆதாயம் உண்டு. அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். தந்தையால் மன அமைதி கெடும். அரசாங்க விஷயத்தில் லாபம் இருக்கும்.
பணத்தை சேமிப்பதில் பிரச்சினை ஏற்படும். குடும்பத்தில் சிக்கல்கள் இருக்கும். பிள்ளை களால் தொல்லைகள் உண்டாகும். தலைவலி வரும். மனதில் எப்போதும் சிந்தனை இருக்கும்.
9-ஆம் பாவத்தில், திரிகோணத்தில், செவ்வாயின் விருச்சிக ராசியில் சனி இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைப்பார்.தைரியசாலியாக இருப்பார். தர்மத்தைக் கடைப்பிடிப்பதில் பிரச்சினை இருக்கும். உடன்பிறந்தோருடன் உள்ள உறவில் குறையிருக்கும். எதிரிகள் அதிக மாக இருப்பார்கள். சண்டை, சச்சரவு இருக்கும். இறுதியில் வெற்றி கிடைக்கும்.
10-ஆம் பாவத்தில் குருவின் தனுசு ராசியில் சனி இருந்தால் தந்தையுடன் உள்ள உறவில் குறையிருக்கும். வியாபாரத்தில் கடுமையான போட்டி நிலவும். நல்ல வருமானம் இருக்கும். வீடு, மனை வாங்குவதில் பல பிரச்சினைகள் உண்டாகும். மனைவியின் உடல்நலத்தில் சில குறைகள் இருக்கும். 40 வயதிற்குப் பிறகு, பெரிய வெற்றி கிடைக்கும்.
11-ஆம் பாவத்தில் சுயராசியான மகர ராசியில் சனி இருந்தால் நல்ல வருமானம் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். நன்கு செலவழிக்கக் கூடியவராக இருப்பார். செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் கடுமையாக உழைத்து பணம் சம்பாதிப்பார். அவருக்கு சுமாரான தோற்றமிருக்கும். பிள்ளைகளால் பிரச்சினைகள் உண்டாகும். படிப்பு விஷயத்தில் சிக்கல்கள் இருக்கும். நீண்ட ஆயுள் உண்டு. முன்னோரின் சொத்து கிடைக்கலாம். ஜாதகர் சுயநலவாதியாக இருப்பார். கடுமையாக பேசுவார்.
12-ஆம் பாவத்தில் சுயராசியான கும்ப ராசியில் சனி இருந்தால், செலவுகள் அதிகமாக இருக்கும். வெளித் தொடர்புகளில் பணம் வரும். குடும்பத்தில் பிரச்சினை இருக்கும். அதிக சிந்தனை ஏற்படும். பகைவர்கள் அதிகமாக இருப் பார்கள். அவர்களால் பிரச்சினை உண்டாகும். பெயர், புகழ் கிடைப்பதற்காக ஜாதகர் பயணம் மேற்கொள்வார். கடுமையாக உழைப்பார்.
செல்: 98401 11534